ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்ஸ்

12 பிப்

தற்போதைய விலை -86.25

மார்க்கெட் கேப் -234.21 கோடி

ராயல் ஆர்க்கிட் நிறுவனம் 30 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு நகரங்களில் 5-நட்சத்திர, 4-நட்சத்திர மற்றும் பட்ஜெட் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்கள். இதன் நிறுவனர் சந்தர் பால்ஜீ முதல் தலைமுறை தொழிலதிபர்.ஒரு தொழில்குடும்பப்பின்னணி இல்லாமல் IIM-A ல் மேலாண்மை படித்து பின்னர் இந்த நிறுவனத்தை தொடங்கியவர்.

2006-ஆம் ஆண்டு பங்கு சந்தையில் வர்த்தகமாக ஆரம்பித்த ராயல் ஆர்க்கிட் பங்குகள், 2008 ல் 264 ரூபாய் மதிப்பை எட்டியது. அதன் பின்னர் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் அணைத்து நிறுவங்களுமே பாதிக்கபட்டன. ஹோட்டல் நிறுவனங்கள் பல் வேறு பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது – நல்ல பொருளாதார சூழ்நிலையை எதிர்பார்த்து நிறைய ஹோட்டல்கள் கட்டப்பட்டன, அதனால் காலி அறைகளின் எண்ணிக்கை உயர்ந்தது, வியாபார ரீதியான பயணங்களின் குறைந்தது, இவையெல்லாம் சேர்த்து ஹோட்டல் ரூம் வாடகை குறைய ஆரம்பித்தது. ஹோட்டல் நிறுவங்கள் பல நஷ்டத்திற்கு செல்ல ஆரம்பித்தன. இந்த நிலையில் வங்கிக்கடன் மூலமாக ஹைதெராபாத் நகரில் ஒரு 5-நட்சத்திர ஹோட்டல் கட்ட முடிவு எடுத்தது.ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் திணறிய ராயல் ஆர்க்கிட் நிறுவனத்தால் வட்டியை சரி வர கட்ட முடியவில்லை. புதிய ஹோட்டல் என்பதால் ஆரம்பத்தில் சுணக்கம் இருந்தது. ஒட்டு மொத்த நிறுவனத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்த நிறுவனம் நஷ்டத்தில் ஹோட்டலை விற்று கடன் சுமையை குறைக்க முடிவு செய்தார்கள். கடனின் காரணமாக CDR-ல் இருந்து பின்னர் 2015 ல் வெளிவந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். கடன் மூலமாக பெரிய முதலெட்டுகளைச்செய்து சொந்தமாக ஹோட்டல்கள் கட்டுவதை விடுத்து ஏற்கனவே உள்ள ஹோட்டல்களை ‘Management Contract’ முறையில் எடுத்து நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பெரிய அளவில் விலைகுறைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச பொருளாதார சூழ்நிலையும் முன்னேறியுள்ளது. சுற்றுலா பயணங்களும், தொழில் முறை பயணங்களும் மீண்டும் முன்புபோல் அதிகரித்து உள்ளன.

மாறிவருகிற பொருளாதார சூழ்நிலையும் , தவறுகளை உணர்ந்து பாதை மாற்றி பயணிக்க ஆரம்பித்துள்ள நிர்வாகமும் சேர்ந்து ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளன. அடுத்த 12-24 மாதங்களில் ராயல் ஆர்க்கிட் நிறுவனத்தில் பல முக்கிய triggers உள்ளன.

  • அடுத்த 2 ஆண்டுகளில் ரூம் rent, occupancy rates இரண்டும் சேர்த்து 10-12% வரை அதிக வருவாயை ஈட்டித்தரும்
  • தற்போது 39 இடங்களில் ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்கள் உள்ளன. இன்னும் 1 வருடத்தில் இந்த எண்ணிக்கை 50-ஆக உயரும்
  • மும்பை நகரின் Powai ஏரியாவில் உள்ள 50,000 அடி இடத்தை விற்பதன் மூலம் அனைத்து கடன்களையும் அடைத்து அதிக லாபம் ஈட்டமுடியும்
Advertisements

Adlabs Imagica IPO

9 மார்ச்

மும்பைக்கும் புனே நகருக்கும் இடையே தீம் பார்க் நடத்துகிற Adlabs Imagica நிறுவனத்தின் IPO 10 மார்ச் முதல் 12 மார்ச் வரை திறந்திருக்கும்.கடந்த ஏப்ரல் மாதம் இதே தொழிலில் ஈடுபட்டு வரும் Wonderla நிறுவனமும் IPO மூலம் முதலீட்டாளர்களிடம் பணம் புரட்டியது.

Adlabs Imagica நிறுவனம் IPO மூலம் 468 கோடி புரட்ட திட்டமிட்டுள்ளது.இதில் பெரும்பகுதி ஏற்கனவே உள்ள 1100 கோடி கடனைத் திருப்பி செலுத்த பயன்படும்.

வளர்ச்சித்திட்டம்
தீம் பார்க் வளாகத்தில் ஒரு 287 ரூம் கொண்ட ஹோட்டல் கொண்டுவரும் திட்டம் உள்ளது. இதை நிர்வகிக்க Novotelஓடு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. தற்சமயம் கிட்டத்தட்ட 70% வருமானம் நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கிறது. இதர வருமானம் உணவு, தின்பண்டங்கள் விற்பனையின் மூலமும் Imagica பெயரிட்ட பொருட்களின் விற்பனையின் மூலமும் ஈட்டபடுகிறது . (சர்வதேச அளவில் பிற தீம் பார்க் நிறுவனங்கள் 50% வருமானத்தை நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் ஈட்டுகின்றன )
Imagica நுழைவுச்சீட்டின் விலை Rs 1500-Rs 1900 வரை உள்ளது. இந்தியாவின் பிற முன்னணி தீம் பார்க்குகளை விட இது 2-2.5 மடங்காகும்.
ஹோட்டல் ஆரம்பித்த உடன் Imagica வை 2-3 நாள் சுற்றுலாக்களுக்கு ஏற்ற இடமாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் திட்டம் உள்ளது. இது தவிர ஹைதராபாத் மற்றும் குஜராத்தில் வேறு கேளிக்கை பூங்காக்கள் அமைக்கவும் திட்டமுள்ளது (அடுத்த சில ஆண்டுகளில் இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. இடம் வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். புதிய பூங்கா உருவாக்க நிறைய முதலீடு தேவைப்படும்.)

ஏற்கனவே நுழைவுசீட்டின் விலை அதிகமாக உள்ளதால் பெரிய அளவில் விலையேற்றம் சாத்தியமில்லை. ஆனால் மக்கள் மத்தியில் இப்போது தான் Adlabs Imagica பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் வருகிற வாடிக்கையாளர் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது.

பங்கின் மதிப்பு
IPOவிற்கு பின் நிறுவனத்தின் marketcap 1600-1750 கோடியாக இருக்கும். புதிய பூங்கா என்ற காரணத்தினால் ஆரம்பகட்ட செலவுகள் அதிகம். வருமானம் நன்றாக இருந்து, தொடர்ந்து வளர்ந்து வந்தால் கூட லாபநிலை அடைய சில ஆண்டுகள் ஆகும்.மதிப்பீட்டின் அடிப்படையில் wonderla இதைவிட மலிவாக உள்ளது (Wonderlaவின் நிர்வாகம் சிறு முதலீட்டாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்படும் . இது கூடுதல் நன்மை )

முதலீடு செய்யலாமா?
Imagicaவில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்துகள் மிகக்குறைவாகவே இருந்தாலும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிக விலை,மற்ற ரிஸ்க்களும் உண்டு என்பதனால் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைப்போர் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.

நல்ல பங்குகளை அடையாளம் காண்பது எப்படி

9 மார்ச்

A Process to Generate Alpha in Equity Investing

நல்ல பங்குகளை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்கிற எல்லா முதலீட்டாளர்கள் மனதிலும் எழும். இந்த மின்ட் செய்தியில் எப்படி அடையாளம் காண்பது, எப்படி முதலீடு செய்வது என்று ஒரு Framework தரப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 2003ல் இருந்து பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்திருந்தால் என்ன லாபம் கிடைத்திருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்கள்.

1) 1000 கோடிக்கு மேல் marketcap கொண்ட பங்குகள்
2) கடன் விகிதம் 30% அல்லது அதற்கும் குறைவாக
3) 15% க்கும் அதிகமான ROE
4) பங்கின் விலை புத்தக மதிப்பை விட 5 மடங்கிற்கு குறைவாக இருக்கவேண்டும் (1 ல் ஆரம்பித்து 2,3,4,5 என்று கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை அடையாளம் காண முயற்சிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்)

ஒவ்வொரு ஆண்டும் இதை தொடர்ந்து செய்து இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத பங்குகளை வெளியேற்றி, பூர்த்தி செய்கிற புதிய பங்குகளை வாங்கவேண்டும். முதல் 2 நிபந்தனைகள் காரணமாக நம்முடைய ரிஸ்கும் குறைந்தே இருக்கும்.

படித்ததில் பிடித்தது- 8 March 2015

8 மார்ச்

1) http://www.businessinsider.in/The-long-and-the-short-of-tax-proposals-in-Budget-for-2015-16/articleshow/46475434.cms

 
இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகப்படுத்தப்படும், போலவே 80C முதலீடுகள் தற்போதய 1.5 லட்சத்தில் இருந்து கொஞ்சம் அதிகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அனால் வரி சம்பந்தமான முக்கியமான அறிவிப்புகள் எல்லாமே தொழில்துறை சார்ந்ததாகவே இருந்தது.

2) http://economictimes.indiatimes.com/news/economy/policy/all-services-will-not-attract-swachh-bharat-cess/articleshow/46491060.cms

 
GST அறிமுகம் செய்ய வசதியாக சேவை வரி 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2% செஸ் சேர்த்து இது 16% ஆகும் என்று சொல்லப்பட்டது. இது எல்லா சேவைகளுக்கும் பொருந்தாது, தேவைக்கு ஏற்ப சில சேவைகளில் மட்டுமே இந்த 2% செஸ் இருக்கும் என்று தெளிவுபடுத்தபட்டுள்ளது.

3) http://www.livemint.com/Money/9Jayt0YzYydQHR1253iozM/Gold-at-3month-low-tumbles-Rs520-on-weak-global-cues.html

 
இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு மோகம் உண்டு. கடந்து 1-2 ஆண்டுகளாக தங்கத்தின் விலை வீழ்ச்சியில் தான் உள்ளது. அடுத்து 2-3 ஆண்டுகளில் கூட இந்த நிலைமையில் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று தோன்றவில்லை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், வீழ்ச்சி இன்னமும் கூட மோசமாக வாய்ப்புள்ளது.

4) http://davidstockmanscontracorner.com/warren-buffett-lucky-coin-flipper/

 

Warren Buffettன் berkshire hathaway நிறுவனத்தின் புத்தக மதிப்பின் வளர்ச்சி குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு கொடுத்த லாபத்தை தொடர்ந்து கொடுக்க முடியுமா என்ற கேள்வியை ஆராய்கிறது.

5) http://www.business-standard.com/article/opinion/dilip-shanghvi-s-wealth-creation-machine-115030600175_1.html

 

Sun Pharma நிறுவனத்தின் திலிப் சங்வியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைவிட அதிகமாகியுள்ளது. இதற்கு முதன்மை காரணம் Sun Pharmaவின் பங்கு விலை கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து உயரந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த 4-5 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் அடையவில்லை.இந்த இணைப்பில் உள்ள செய்தியில் கடந்த 20 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.இந்த லிஸ்டில் உள்ள சில பங்குகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கூட நல்ல முதலீடுகளாக இருக்கும்

Future Retail

19 ஜூன்

கிஷோர் பியானி தலைமையில் இயங்கும சில்லறை வர்த்தகம் செய்யும் குழுமம் Future Group. கடந்த ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி கண்ட நிறுவனம் இது. சில்லறை வர்த்தகத்தின் எல்லா பிரிவுகளிழும் கால் வைக்க ஆரம்பித்ததில் கடன் சுமை அதிகமாகி 2கடந்த  ஆண்டுகளில் பிரச்சனைகளுக்கு உண்டானது. Restructuring செய்து லாபமில்லாத கடைகளை மூடி, சில பிரிவுகளில் (குறிப்பாக EZone) வர்த்தகம் செய்யும் முறையை மாற்றி, சில பிரிவுகளை விற்றும் கடன் சுமையை குறைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

Future குரூப்பை சேர்ந்த fashion வர்த்தக பிரிவு – பண்டலூன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த துணிக்கடைகளை ஆதித்ய  பிர்லா குழுமத்திடம் விற்று விட்டார்கள். இது ஒரு win-win டீல் என்று சொல்லலாம். Future Group  இதன் மூலம் கடனைக்குரைக்க முடியும். ஆதித்ய பிர்லா வால் அவர்களுடைய சில்லறை வர்த்தக தொழிலை வேகமாக வளர்க்க முடியும். அவர்கலிடம் Madura Garments மூலமாக நல்ல பிராண்ட்ஸ் (பீட்டர் இங்கிலாந்த் போல) உள்ளன. அதனால் பேஷன் ரீடெயில் அவர்களுக்கும் நல்ல லாபகரமானதாக இருக்கும்.

 

Future Retail – இந்த restructuring மூலம் பேஷன் ரீடெயில் தொழிலை Future Lifestyle Fashion Limited (FLFL) என்று demerge செய்ய உள்ளது.
அந்த demerger கு 24 ஜூன் record date ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது. FRL அல்லது FRL-DVR ன் 3 பங்குகளுக்கு 1 FLFL பங்கு கிடைக்கும்.
 
இதை மூன்று விதமாக பயன்படுத்தலாம் 
 
1) நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் FRL- DVR பங்குகளை வாங்கலாம். அல்லது FRL பங்குகளும் வாங்கலாம். முன்னேறிவரும் பொருளாதார சூழ்நிலை, வட்டிவிகித குறைப்பின் மூலம் கிடைக்கும் interest cost gains, restructuring ன் benefits ஆகியவை இந்த பங்கின் positives. 
 
2) குறிகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் 20 ஜூன் க்கு முன்னாள் (இன்றோ நாளையோ) FRL -DVR பங்குகளை வாங்கலாம். record date க்கு பின்னர் விற்று விடலாம்.FLFL பங்குகள் issue ஆன பின்னர் அவற்றையும் விற்று விடலாம்.
 
3) Record date க்கு முன்னர் பங்கு இதை எதிர்பார்த்து விலை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் ஹை-ரிஸ்க் traders F&O வில் call option வாங்கலாம் 
 

படித்ததில் பிடித்தது- 27 May 2013

27 மே

1) http://www.ft.com/intl/cms/s/0/51dc6cca-c145-11e2-b93b-00144feab7de.html#axzz2UPR0qDX7

 
ஐரோப்பா வில் தற்போது நிலவி வரும் திறமையுள்ள பொறியியல் நிபுணர்கள் பற்றாக்குறை பற்றியது. இந்தியாவும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் உள்ளது என்பது குறிபிடத்தக்கது. ( FT யின் இந்த இடுகை ‘paywall’ க்கு பின்னால் இருந்தால் கூகிள்-ல் ‘Alarm over skills shortage in Europe’ என்று தேடவும் )
 
2) 2) http://www.ft.com/intl/cms/s/0/d4725a6a-c49b-11e2-9ac0-00144feab7de.html#axzz2UPR0qDX7

 
 
இந்தியாவின் அடுத்த தேர்தலில் நரேந்திர மோதியா ராகுல் காந்தியா என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது என்றும் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் சில compromises தேவைப்படும் என்று குருசரண் தாஸ் வாதிடுகிறார். நரேந்திர மோடியா ராகுல் காந்தியா என்ற இந்த வாதம் இந்திய தேர்தல் முறையையே சற்றே கேலி செய்வது போல்தான். (கூகிள்-ல் India’s election choice is between tolerance and governance என்று டைப் செய்யவும்)
 
3) http://www.businessinsider.com/googles-doodle-coming-home-from-war-2013-5

போரிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ வீரனை எதிர்பார்த்துக்காத்திருக்கும் சிறு குழந்தையின் பார்வையில் ஒரு google doodle. 12 வயது சிறுமி செய்ததா என்று பிரமிக்க வைக்கிறது 
 
4) http://www.livemint.com/Opinion/98JaZH0ULHmHV1dFcctulO/A-right-time-for-inflationindexed-bonds.html?google_editors_picks=true

 
கடந்த சில வாரங்களாக ‘inflation -indexed bonds’ (பண வீக்கத்தை அடிப்படையாக கொண்ட கடன் பத்திரங்கள்) பற்றிய விவாதங்கள் நடப்பதை பார்த்திருப்பீர்கள். தற்சமயம் RBI இதை செய்கிற லாஜிக்கை சொல்கிற பதிவு. சாமானியர்களுக்கு இவை நல்ல முதலீடா என்ற கோணத்தில் அணுகி இருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும் 
 
5) http://www.businessinsider.com/stock-market-warning-signs-2013-5?op=1

 
 
 
 
அமெரிக்க சந்தைகளின் சில indicators வைத்து ஒரு இறக்கம் இருக்கிறது என்றும் கடந்த வாரங்களில் நடந்த சந்தை எழுச்சிக்கு எந்த அடிப்படை காரங்களும் இல்லை என்றும்  சொல்கிறார்கள். ‘புலி வருது’ என்று உதார் விடுவதை போல இதோ சந்தை 20% இறங்கப்போகிறது என்று பயமுறுத்தும் வெத்து பதிவாக போகலாம். காலம் தான் பதில் சொல்லும். இவர்கள் சொல்கிற நிறைய அம்சங்களில் இந்திய சந்தை நல்ல நிலைமைகளிலேயே இன்னும் இருக்கிறது என்பது ஆறுதல்.
 
நீங்கள் படித்த கேட்ட நல்ல விஷயங்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

படித்ததில் பிடித்தது

26 மே

வார வாரம் நான் படிக்கிற விஷயங்களை (சந்தை பற்றி மற்றுமின்றி பொதுவான விஷயங்கள்,நியூஸ், அரசியல் etc) ட்விட்டரில் பகிர்ந்து வருகிறேன். அதில் சில சந்தை, பொருளாதாரம், வியாபாரம் சம்பந்தப்பட்ட லின்க்ஸை வாரமொரு முறை இங்கே பதிவிட நினைத்துள்ளேன் 

1) http://www.businessweek.com/articles/2013-05-22/inside-googles-secret-lab#p1

Google X என்ற Google நிறுவத்தின் தனி ஆராய்ச்சி பிரிவு பற்றிய ஒரு நல்ல பதிவு. Google உலகம் போற்றும் ஒரு நிறுவனமாக இருப்பதற்கு இது போன்ற முயற்சிகளின் பங்கு மிக முக்கியமானது.

 

2) http://features.blogs.fortune.cnn.com/2013/05/15/ranbaxy-fraud-lipitor/

நெஞ்சை உறைய வைக்கும் பதிவு. இந்திய செய்தி நிறுவனங்கள் சரி வர அலசாத மிக முக்கியமான ஒரு பிரச்சனை பற்றிய பதிவு. 

3) http://www.livemint.com/Companies/berlxRhoYdBTg2gTKsjqNO/The-world-is-converging-towards-midsize-motorcycles.html

Eicher Motors முதன்மை செயல் அதிகாரியினுடைய கலந்துரையாடல். Royal Enfield இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் Volvo வோடு இணைந்து உயர்ரக பேருந்துகள் தயாரிக்கிறார்கள். சரியான விலையில் வாங்கினால் இது நல்ல லாபம் தரக்கூடிய பங்கு.