Future Retail

19 ஜூன்

கிஷோர் பியானி தலைமையில் இயங்கும சில்லறை வர்த்தகம் செய்யும் குழுமம் Future Group. கடந்த ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி கண்ட நிறுவனம் இது. சில்லறை வர்த்தகத்தின் எல்லா பிரிவுகளிழும் கால் வைக்க ஆரம்பித்ததில் கடன் சுமை அதிகமாகி 2கடந்த  ஆண்டுகளில் பிரச்சனைகளுக்கு உண்டானது. Restructuring செய்து லாபமில்லாத கடைகளை மூடி, சில பிரிவுகளில் (குறிப்பாக EZone) வர்த்தகம் செய்யும் முறையை மாற்றி, சில பிரிவுகளை விற்றும் கடன் சுமையை குறைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

Future குரூப்பை சேர்ந்த fashion வர்த்தக பிரிவு – பண்டலூன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த துணிக்கடைகளை ஆதித்ய  பிர்லா குழுமத்திடம் விற்று விட்டார்கள். இது ஒரு win-win டீல் என்று சொல்லலாம். Future Group  இதன் மூலம் கடனைக்குரைக்க முடியும். ஆதித்ய பிர்லா வால் அவர்களுடைய சில்லறை வர்த்தக தொழிலை வேகமாக வளர்க்க முடியும். அவர்கலிடம் Madura Garments மூலமாக நல்ல பிராண்ட்ஸ் (பீட்டர் இங்கிலாந்த் போல) உள்ளன. அதனால் பேஷன் ரீடெயில் அவர்களுக்கும் நல்ல லாபகரமானதாக இருக்கும்.

 

Future Retail – இந்த restructuring மூலம் பேஷன் ரீடெயில் தொழிலை Future Lifestyle Fashion Limited (FLFL) என்று demerge செய்ய உள்ளது.
அந்த demerger கு 24 ஜூன் record date ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது. FRL அல்லது FRL-DVR ன் 3 பங்குகளுக்கு 1 FLFL பங்கு கிடைக்கும்.
 
இதை மூன்று விதமாக பயன்படுத்தலாம் 
 
1) நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் FRL- DVR பங்குகளை வாங்கலாம். அல்லது FRL பங்குகளும் வாங்கலாம். முன்னேறிவரும் பொருளாதார சூழ்நிலை, வட்டிவிகித குறைப்பின் மூலம் கிடைக்கும் interest cost gains, restructuring ன் benefits ஆகியவை இந்த பங்கின் positives. 
 
2) குறிகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் 20 ஜூன் க்கு முன்னாள் (இன்றோ நாளையோ) FRL -DVR பங்குகளை வாங்கலாம். record date க்கு பின்னர் விற்று விடலாம்.FLFL பங்குகள் issue ஆன பின்னர் அவற்றையும் விற்று விடலாம்.
 
3) Record date க்கு முன்னர் பங்கு இதை எதிர்பார்த்து விலை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் ஹை-ரிஸ்க் traders F&O வில் call option வாங்கலாம் 
 

3 பதில்கள் to “Future Retail”

  1. Lincon Nivas ஜூன் 23, 2013 இல் 9:28 முப #

    frl லில் திங்கள் intra செய்யலாமா ? nifty bounce ஆனால் 2 – 3 % ஏறும் என்று நினைக்கிறன் சரியா?

    • helloram ஜூன் 25, 2013 இல் 11:39 முப #

      பதிவில் சொல்லி இருந்ததை போல நான் 19 ஆம் தேதி கால் 20 வாங்கி ஆம் தேது விற்று விட்டேன். 21 ஆம் தேதி நான் FRL விலையில் சரிவு இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன் என்றாலும் இவ்வளவு சரியு என்று நினைக்கவில்லை. இந்த சரிவை ஈடுகட்ட FLFL 130-150 ருபாய் அளவில் லிஸ்ட் ஆகா வேண்டும். வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

      பேஷன் தொழில் நீங்கலாக இப்போது FRL ல் பிக் பஜார், EZone மற்றும் வேறு சில பிராண்டுகள் உள்ளன. 85-90 ருபாய் அளவில் FRL ல் முதலீடு செய்யலாம். சந்தையின் போக்கு கொஞ்சம் மோசமாக இருப்பதால், அவசரப்பட்டு குறுகிய கால trade செய்ய வேண்டாம்.

    • helloram ஜூன் 25, 2013 இல் 11:43 முப #

      உங்க வாய் முகூர்த்தம், நிப்டி இன்று ஏற ஆரம்பித்தது. ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், க்ளோஸ் ஸ்டாப் லாஸோடு ஜூலை nifty கால் வாங்கலாம். ரிஸ்க் averse traders, சந்தையின் திசை தெளிவாகும் வரை வெளியேயிருப்பது நல்லது

Lincon Nivas -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி