Archive | மார்ச், 2015

Adlabs Imagica IPO

9 மார்ச்

மும்பைக்கும் புனே நகருக்கும் இடையே தீம் பார்க் நடத்துகிற Adlabs Imagica நிறுவனத்தின் IPO 10 மார்ச் முதல் 12 மார்ச் வரை திறந்திருக்கும்.கடந்த ஏப்ரல் மாதம் இதே தொழிலில் ஈடுபட்டு வரும் Wonderla நிறுவனமும் IPO மூலம் முதலீட்டாளர்களிடம் பணம் புரட்டியது.

Adlabs Imagica நிறுவனம் IPO மூலம் 468 கோடி புரட்ட திட்டமிட்டுள்ளது.இதில் பெரும்பகுதி ஏற்கனவே உள்ள 1100 கோடி கடனைத் திருப்பி செலுத்த பயன்படும்.

வளர்ச்சித்திட்டம்
தீம் பார்க் வளாகத்தில் ஒரு 287 ரூம் கொண்ட ஹோட்டல் கொண்டுவரும் திட்டம் உள்ளது. இதை நிர்வகிக்க Novotelஓடு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. தற்சமயம் கிட்டத்தட்ட 70% வருமானம் நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கிறது. இதர வருமானம் உணவு, தின்பண்டங்கள் விற்பனையின் மூலமும் Imagica பெயரிட்ட பொருட்களின் விற்பனையின் மூலமும் ஈட்டபடுகிறது . (சர்வதேச அளவில் பிற தீம் பார்க் நிறுவனங்கள் 50% வருமானத்தை நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் ஈட்டுகின்றன )
Imagica நுழைவுச்சீட்டின் விலை Rs 1500-Rs 1900 வரை உள்ளது. இந்தியாவின் பிற முன்னணி தீம் பார்க்குகளை விட இது 2-2.5 மடங்காகும்.
ஹோட்டல் ஆரம்பித்த உடன் Imagica வை 2-3 நாள் சுற்றுலாக்களுக்கு ஏற்ற இடமாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் திட்டம் உள்ளது. இது தவிர ஹைதராபாத் மற்றும் குஜராத்தில் வேறு கேளிக்கை பூங்காக்கள் அமைக்கவும் திட்டமுள்ளது (அடுத்த சில ஆண்டுகளில் இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. இடம் வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். புதிய பூங்கா உருவாக்க நிறைய முதலீடு தேவைப்படும்.)

ஏற்கனவே நுழைவுசீட்டின் விலை அதிகமாக உள்ளதால் பெரிய அளவில் விலையேற்றம் சாத்தியமில்லை. ஆனால் மக்கள் மத்தியில் இப்போது தான் Adlabs Imagica பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் வருகிற வாடிக்கையாளர் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது.

பங்கின் மதிப்பு
IPOவிற்கு பின் நிறுவனத்தின் marketcap 1600-1750 கோடியாக இருக்கும். புதிய பூங்கா என்ற காரணத்தினால் ஆரம்பகட்ட செலவுகள் அதிகம். வருமானம் நன்றாக இருந்து, தொடர்ந்து வளர்ந்து வந்தால் கூட லாபநிலை அடைய சில ஆண்டுகள் ஆகும்.மதிப்பீட்டின் அடிப்படையில் wonderla இதைவிட மலிவாக உள்ளது (Wonderlaவின் நிர்வாகம் சிறு முதலீட்டாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்படும் . இது கூடுதல் நன்மை )

முதலீடு செய்யலாமா?
Imagicaவில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்துகள் மிகக்குறைவாகவே இருந்தாலும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிக விலை,மற்ற ரிஸ்க்களும் உண்டு என்பதனால் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைப்போர் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.

நல்ல பங்குகளை அடையாளம் காண்பது எப்படி

9 மார்ச்

A Process to Generate Alpha in Equity Investing

நல்ல பங்குகளை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்கிற எல்லா முதலீட்டாளர்கள் மனதிலும் எழும். இந்த மின்ட் செய்தியில் எப்படி அடையாளம் காண்பது, எப்படி முதலீடு செய்வது என்று ஒரு Framework தரப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் 2003ல் இருந்து பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்திருந்தால் என்ன லாபம் கிடைத்திருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்கள்.

1) 1000 கோடிக்கு மேல் marketcap கொண்ட பங்குகள்
2) கடன் விகிதம் 30% அல்லது அதற்கும் குறைவாக
3) 15% க்கும் அதிகமான ROE
4) பங்கின் விலை புத்தக மதிப்பை விட 5 மடங்கிற்கு குறைவாக இருக்கவேண்டும் (1 ல் ஆரம்பித்து 2,3,4,5 என்று கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை அடையாளம் காண முயற்சிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்)

ஒவ்வொரு ஆண்டும் இதை தொடர்ந்து செய்து இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத பங்குகளை வெளியேற்றி, பூர்த்தி செய்கிற புதிய பங்குகளை வாங்கவேண்டும். முதல் 2 நிபந்தனைகள் காரணமாக நம்முடைய ரிஸ்கும் குறைந்தே இருக்கும்.

படித்ததில் பிடித்தது- 8 March 2015

8 மார்ச்

1) http://www.businessinsider.in/The-long-and-the-short-of-tax-proposals-in-Budget-for-2015-16/articleshow/46475434.cms

 
இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகப்படுத்தப்படும், போலவே 80C முதலீடுகள் தற்போதய 1.5 லட்சத்தில் இருந்து கொஞ்சம் அதிகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அனால் வரி சம்பந்தமான முக்கியமான அறிவிப்புகள் எல்லாமே தொழில்துறை சார்ந்ததாகவே இருந்தது.

2) http://economictimes.indiatimes.com/news/economy/policy/all-services-will-not-attract-swachh-bharat-cess/articleshow/46491060.cms

 
GST அறிமுகம் செய்ய வசதியாக சேவை வரி 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2% செஸ் சேர்த்து இது 16% ஆகும் என்று சொல்லப்பட்டது. இது எல்லா சேவைகளுக்கும் பொருந்தாது, தேவைக்கு ஏற்ப சில சேவைகளில் மட்டுமே இந்த 2% செஸ் இருக்கும் என்று தெளிவுபடுத்தபட்டுள்ளது.

3) http://www.livemint.com/Money/9Jayt0YzYydQHR1253iozM/Gold-at-3month-low-tumbles-Rs520-on-weak-global-cues.html

 
இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு மோகம் உண்டு. கடந்து 1-2 ஆண்டுகளாக தங்கத்தின் விலை வீழ்ச்சியில் தான் உள்ளது. அடுத்து 2-3 ஆண்டுகளில் கூட இந்த நிலைமையில் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று தோன்றவில்லை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், வீழ்ச்சி இன்னமும் கூட மோசமாக வாய்ப்புள்ளது.

4) http://davidstockmanscontracorner.com/warren-buffett-lucky-coin-flipper/

 

Warren Buffettன் berkshire hathaway நிறுவனத்தின் புத்தக மதிப்பின் வளர்ச்சி குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு கொடுத்த லாபத்தை தொடர்ந்து கொடுக்க முடியுமா என்ற கேள்வியை ஆராய்கிறது.

5) http://www.business-standard.com/article/opinion/dilip-shanghvi-s-wealth-creation-machine-115030600175_1.html

 

Sun Pharma நிறுவனத்தின் திலிப் சங்வியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைவிட அதிகமாகியுள்ளது. இதற்கு முதன்மை காரணம் Sun Pharmaவின் பங்கு விலை கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து உயரந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த 4-5 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் அடையவில்லை.இந்த இணைப்பில் உள்ள செய்தியில் கடந்த 20 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.இந்த லிஸ்டில் உள்ள சில பங்குகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கூட நல்ல முதலீடுகளாக இருக்கும்