தொகுப்பு | பிப்ரவரி, 2017

ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்ஸ்

12 பிப்

தற்போதைய விலை -86.25

மார்க்கெட் கேப் -234.21 கோடி

ராயல் ஆர்க்கிட் நிறுவனம் 30 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு நகரங்களில் 5-நட்சத்திர, 4-நட்சத்திர மற்றும் பட்ஜெட் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்கள். இதன் நிறுவனர் சந்தர் பால்ஜீ முதல் தலைமுறை தொழிலதிபர்.ஒரு தொழில்குடும்பப்பின்னணி இல்லாமல் IIM-A ல் மேலாண்மை படித்து பின்னர் இந்த நிறுவனத்தை தொடங்கியவர்.

2006-ஆம் ஆண்டு பங்கு சந்தையில் வர்த்தகமாக ஆரம்பித்த ராயல் ஆர்க்கிட் பங்குகள், 2008 ல் 264 ரூபாய் மதிப்பை எட்டியது. அதன் பின்னர் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் அணைத்து நிறுவங்களுமே பாதிக்கபட்டன. ஹோட்டல் நிறுவனங்கள் பல் வேறு பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது – நல்ல பொருளாதார சூழ்நிலையை எதிர்பார்த்து நிறைய ஹோட்டல்கள் கட்டப்பட்டன, அதனால் காலி அறைகளின் எண்ணிக்கை உயர்ந்தது, வியாபார ரீதியான பயணங்களின் குறைந்தது, இவையெல்லாம் சேர்த்து ஹோட்டல் ரூம் வாடகை குறைய ஆரம்பித்தது. ஹோட்டல் நிறுவங்கள் பல நஷ்டத்திற்கு செல்ல ஆரம்பித்தன. இந்த நிலையில் வங்கிக்கடன் மூலமாக ஹைதெராபாத் நகரில் ஒரு 5-நட்சத்திர ஹோட்டல் கட்ட முடிவு எடுத்தது.ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் திணறிய ராயல் ஆர்க்கிட் நிறுவனத்தால் வட்டியை சரி வர கட்ட முடியவில்லை. புதிய ஹோட்டல் என்பதால் ஆரம்பத்தில் சுணக்கம் இருந்தது. ஒட்டு மொத்த நிறுவனத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்த நிறுவனம் நஷ்டத்தில் ஹோட்டலை விற்று கடன் சுமையை குறைக்க முடிவு செய்தார்கள். கடனின் காரணமாக CDR-ல் இருந்து பின்னர் 2015 ல் வெளிவந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். கடன் மூலமாக பெரிய முதலெட்டுகளைச்செய்து சொந்தமாக ஹோட்டல்கள் கட்டுவதை விடுத்து ஏற்கனவே உள்ள ஹோட்டல்களை ‘Management Contract’ முறையில் எடுத்து நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பெரிய அளவில் விலைகுறைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச பொருளாதார சூழ்நிலையும் முன்னேறியுள்ளது. சுற்றுலா பயணங்களும், தொழில் முறை பயணங்களும் மீண்டும் முன்புபோல் அதிகரித்து உள்ளன.

மாறிவருகிற பொருளாதார சூழ்நிலையும் , தவறுகளை உணர்ந்து பாதை மாற்றி பயணிக்க ஆரம்பித்துள்ள நிர்வாகமும் சேர்ந்து ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளன. அடுத்த 12-24 மாதங்களில் ராயல் ஆர்க்கிட் நிறுவனத்தில் பல முக்கிய triggers உள்ளன.

  • அடுத்த 2 ஆண்டுகளில் ரூம் rent, occupancy rates இரண்டும் சேர்த்து 10-12% வரை அதிக வருவாயை ஈட்டித்தரும்
  • தற்போது 39 இடங்களில் ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்கள் உள்ளன. இன்னும் 1 வருடத்தில் இந்த எண்ணிக்கை 50-ஆக உயரும்
  • மும்பை நகரின் Powai ஏரியாவில் உள்ள 50,000 அடி இடத்தை விற்பதன் மூலம் அனைத்து கடன்களையும் அடைத்து அதிக லாபம் ஈட்டமுடியும்
Advertisements