Weekly Update -(20 May-24 May)

25 மே

கடந்த வாரம் Nifty 6200 அளவுகளில் இருந்து வெள்ளியன்று 5936 வரை இறங்கி பின்னர் 5983 என்ற அளவில் close ஆனது. வியாழனன்று சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

 
இந்த correction-அ பயன்படுத்தி நல்ல பங்குகளில்  முதலீடு செய்ய வேண்டும். கடந்த வாரத்தில் Tata Steel, BHEL, Can Fin ஹோம்ஸ், Unichem Labs, Future Retail பங்குகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் முதலீடு செய்தேன். Eros International, Piramal Enterprises, Karnataka Bank ஆகிய பங்குகள் இன்னும் சற்று இருங்கி இருந்தால் வாங்கி சராசரி செய்திருப்பேன்.
 
டாட்டா ஸ்டீல் மற்றும் BHEL-அ  பொறுத்தவரை மாதா மாதம் SIP முறையில் வாங்க நினைக்கிறேன். டாட்டா ஸ்டீல் பற்றி ஒரு தனி பதிவு அடுத்த வாரம். 2 நிறுவனங்களுமே கடந்த வாரம் FY 2013 results வெளியிட்டன. டாட்டா ஸ்டீல் $1.5 பில்லியன் அளவுக்கு impairment loss புக் செய்ததன் விளவைவாக நிறைய கேள்விகள் இருந்தன. டாட்டா ஸ்டீலின் செயல்பாடு ஓரளவுக்கு சீராகியுள்ளது. BHEL முடிவுகள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. BHEL-ல் cash flow பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. (இந்த லிங்க்-ல் http://www.business-standard.com/article/companies/bhel-desperate-bid-to-preserve-cash-113052100626_1.html மிக விரிவாக விளக்கியுள்ளார்கள் )
 
இது தவிர Astral poly technik,  CCL Products ஆகிய பங்குகளின் முடிவுகளும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. Astral க்கு மிக அபார வளர்ச்சி கடந்த ஆண்டில். 400-410 ல் வர்த்தகமாகிக்கொண்டிருந்த பங்கு 550 தொட்டது. இந்த வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகள் நீண்டுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CCL ல் வளரச்சி எதிர்ப்பார்த்த அளவு இல்லை.  ஏப்ரல்-ல் ஒரு புது factory Vietnamல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக FY 2014 நன்றாக இருக்க வேண்டும். 
 
980 அளவில் அஜந்தா பார்மாவில் நான் வைத்திருந்த சிறிய  பொசிஷனை விற்று விட்டேன்.  (இங்கே https://kaalaiyumkaradiyum.wordpress.com பதிவிடுகிற பாபுவின் தமிழ் tech analysis குரூப்பில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் 34 EMA அளவு நல்ல என்ட்ரி பாயிண்ட் என்று தெரிகிறது. தனிப்பட்ட முறையில் பெரிய price correction irukkathu என்று தோனுகிறது. நல்ல டைம் correction இருக்க வாய்ப்புள்ளது.  டைம் correction மற்றும் price consolidation நடந்தால் அது பங்கிற்கு இன்னும் வலிமை சேர்க்கும்)
Advertisements

ரிசல்ட் அப்டேட் – IRB Infra

17 மே

இதற்க்கு முந்தைய பதிவில் IRB Infra பற்றி குறிப்பிட்டிருந்தேன் இந்த வாரம் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.

 
 
 
முக்கியமான விஷயங்களை இந்த 2 links உம் நன்றாக capture செய்துள்ளன. முடிவுகளின் விளைவாக IRB Infra பங்கும் 10% அதிகரித்துள்ளது. 
 
முன்பு குறிப்பிட்டு இருந்ததை போல, நிர்வாகத்தின் மீது நிறைய கேள்விகள் உள்ளன. (நிதின் கட்கரி மஹாராஷ்டிராவில் அமைச்சராக இருந்த பொது இந்த நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகளை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  
 
அது தவிர ஒரு RTI activist கொலை செய்யப்ப்பட்ட  வழக்கிலும் IRBயின் நிர்வாக இயக்குனர் விநாயக் மாய்ஷ்கரை  CBI விசாரித்து வருகிறது. 
 
சந்தை நல்ல uptrendல் சென்று கொண்டு இருக்கிறது. நிறைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதனால் இது போன்ற பங்குகளை தவிர்த்து விடலாம்.

Portfolio Updates

12 மே

சந்தை புதிய உயரங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் என்னுடைய முதலீடுகளை அலசி, சந்தையின் அடுத்த 2 ஆண்டு போக்கை கணக்கில் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.

My Top 5 Holdings:

Piramal Enterprises

2011 ல் இந்த பங்கை வாங்க ஆரம்பித்தேன். நிறுவனத்தின் சில பகுதிகளைத்தவிர எல்லாவற்றையும் Abbott நிறுவனத்திற்கு விற்று அதில் வந்த பணத்தை முதலீடு செய்ய எத்தனித்துளளார்கள். NBFC, ரியல் எஸ்டேட் துறைகளில் வளர நினைக்கிறார்கள். vodafone ல் முதலீடு, pharma ஆராய்ச்சிக்காக சில வெளிநாட்டு நிறுவங்களை வாங்கியது, இந்திய ரியல் எஸ்டேட் முதலீடுகள், 1000 கோடிக்கு infra முதலீடு என்று கடந்து 2 ஆண்டுகள் பிஸியாகவே இருந்துள்ளார்கள். Shriram நிறுவனத்தில் 10% பங்குகளை சென்ற வாரம் வாங்கியது ஆச்சர்யமான விஷயம். என்னுடைய கணிப்பு இரு நிறுவங்களும் இணைந்து வங்கி அமைக்க முயற்சிப்பார்கள்.

 
என்னுடைய முதலீட்டில் 10% இந்த பங்கில் உள்ளது. தொடர்ந்து 200 DMA க்கு அருகில் வாங்க நினைக்கிறேன்.
 
Unichem Labs
 
இந்த பங்கின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அடுத்த 2 ஆண்டுகள் நல்ல லாபம் கொடுக்கும் பங்கு இது. Unichem ன் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் (foreign subsidiaries ) இந்த ஆண்டே லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அது பூர்த்தியாகவில்ல என்றாலும் இந்திய சந்தையில் எதிர்பார்ப்பை விட அதிக வளர்ச்சி காண்பித்தது. அடுதத ஆண்டில் துணை நிறுவனங்களின் செயல்பாடுகளும் கைகூடினால் நல்ல பலன் இருக்கும். நிறுவனத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. உரிமையாளர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

 
 
Rs 175-180 ல் தொடர்ந்து இந்த பங்கினை வாங்க திட்டமிட்டுள்ளேன்.
 
Can Fin Homes
 
கனரா வங்கியினுடைய வீட்டுக்கடன் நிறுவனம். இந்த பங்கைப்பற்றி ஒரு தனி பதிவிட வேண்டுமென 45 நாட்களை யோசித்துக்கொண்டிருக்கிறேன். வேலைப்பளுவின் காரணமாக கைகூடவில்லை. இந்த நிறுவனம் வெகு நாட்கள் எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாமல் திக்கு தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட நல்ல வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. புது கடன் வழங்குதல், கிளைகளை இந்தியா பூராவும் திறப்பது போன்ற விஷயங்களில் நல்ல கவனம் செலுத்துகிறார்கள்.அரசாங்கமும் Tier-II நகரங்களில் வீட்டு வசதி உருவாக்குவதில் முனைப்பாக செயல்படுகிறது.அதுவும் இந்த பங்கிற்கு சாதகமான விஷயம்.
 
Aurobindo Pharma
 
நல்ல பங்கு தான் என்றாலும் இடையில் மிகப்பெரிய சறுக்கல்களை சந்தித்தது. நிறுவனத்தின் உரிமையாளர் ஜகன் ரெட்டியோடு தொடர்புடையடவர் என்று CBI raid நடந்தது. US FDA நிறுவனத்தின் சில factoryகளுக்கு அனுமதி வழங்க மறுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வீண் என்றே சொல்ல வேண்டும். கடந்த சில மாதங்களாகத்தான் நிலைமை சீராக உள்ளது. நல்ல லாபம் தரக்கொடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் நிர்வாகத்தின் மீது கேலிகுறி இருப்பதால் தொடர்ந்து முதலீடு செய்யும் எண்ணம் இல்லை.
 
IRB INFRA
 
நஷ்டத்தில் விற்க மனம் இல்லாமல் வைத்துக்கொண்டிருக்கும் பங்கு. நல்ல நிறுவனம், பொருளாதார சூழ்நிலை சீரானால் நன்றாக செயல்பட வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் மீது நிறைய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தவிர்ப்பது நல்லது 
 
Other Key Holdings
Astral Poly technik
Cera Sanitaryware
Tata Global Beverages
Godrej Properties
Hindalco
CCL Products
 
ஹிண்டல்கோ, டாட்டா மோடார்ஸ், டாட்டா ஸ்டீல், BHEL ஆகிய பங்குகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நல்ல விலைகளில் allocation ஐ அதிகரிக்க திட்டம்.

 
 
Piramal Enterprises, Can Fin Homes ஆகியவைபற்றி மிகவிரைவில் தனிப்பதிவிடுகிரேன். 
 
முதலீகளைபற்றிய உங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.

Ajanta Pharma

11 மே

Ajanta Pharma வின் பங்கு ஒரு நம்பமுடியாத uptrend ல் உள்ளது.

 
380-400 ரேஞ்சில் வர்த்தகமாகிக்கொன்டிருந்த பங்கு ஜனவரி இறுதியில் மூன்றாம் காலாண்டு முடிவுகளுக்குப்பின் சூடுபிடித்து 650 வரை சென்றது. அது வரையில் இந்த பங்கினை வெளியேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஜனவரி இறுதியில் இந்த பங்கை ‘buy on dips’ வகையில் வாங்குவது என்று முடிவு செய்து 570 ல் சில பங்குகளை வாங்கினேன். ஏப்ரல் முதல் வாரத்தில் 750க்கு மேல் வர்த்தகமாக ஆரம்பித்தது. delivery % மிக குறைவாக இருக்கவே பங்கை விற்றுவிட்டேன். 670-700 ல் கொஞ்சம் முதலீடு செய்தேன். சென்ற வாரத்தில் 900 க்கு மேல் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. 
 
புதிய உயரங்களைத் தொடும் பொழுது delivery % குறைவாக இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். குறிகிய கால  வர்த்தகம் செய்ய நினைக்கும் traderகளுக்கும் சரி, பங்கின் அடிப்படையை கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் சரி இது சரியான பங்கு.
 
பங்கின் volatility நல்ல entry நிலைகளைக்கொடுக்கும். Rs 800 க்கு கீழே மெதுவாக இந்த பங்கினை வாங்க ஆரம்பிக்கலாம்.
 
1) நல்ல dividend பாலிசி. இந்த ஆண்டு Rs 6.25 டிவிடெண்ட் வழங்கப்பட்டது. சராசரியாக நிகர லாபத்தில் 10-15% வரை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக கொடுக்கபடுகிறது 
 
2) அபாரமான வளர்ச்சி 
கடந்த 5 ஆண்டுகள் விற்பனை வளர்ச்சி விகிதம் – 20.41%
கடந்த 5 ஆண்டுகள் PAT வளர்ச்சி விகிதம் – 37%
 
3) இந்த விலையிலும் தொடர்ந்து Ajanta Pharma promoters சந்தையிலிருந்து பங்குகளை வாங்குகிறார்கள்.
 
4) புதிய தயாரிப்புகளை பொறுத்த வரை 12 ANDA applications – US FDA வின் அனுமதிக்காக இருக்கின்றன. ஆண்டுக்கு 5-6 புதிய மருந்தகளுக்கான application சமர்ப்பிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

5) முந்தைய காலண்டுகளை விட 15 கோடி ருபாய் அதிக tax outgo  நான்காம் காலாண்டில் இருந்தது. Tax outgo பழைய நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அப்படியாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முடிவுகள் மிக நன்றாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
 
800-900 range ல் சிறுக சிறுக சேர்ப்பது என்று தீர்மானித்துள்ளேன்.
 
குறிகிய கால trade செய்ய நினைப்பவர்கள் delivery % ல் ஒரு கண் வைத்து, அது கூடும் பொழுது வாங்கி குறையும் பொது விற்கலாம்.

 

பங்கு அலசல் – Eros International Media

14 ஏப்

ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் Eros International Media. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஐங்கரன் நிறுவனம் தெரிந்திருக்கும்.Eros ஐங்கரனில் 51% பங்கு வைத்துள்ளது. இந்த பதிவில் Eros முதலீடு செய்வது  பற்று அலசுவோம்.

 
Eros சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்கிற ஒரு நிறுவனம். பொதுவாகவே சினிமா தயாரிப்பு என்பது முதலுக்கே மோசம் வரக்கூடிய ஒரு தொழில். அந்த வகையில் Eros ரிஸ்கைகுறைக்க முக்கியமான சில யுக்திகளை கையாள்கிறது 
 
1) ஹிந்தி, பஞ்சாபி மற்றும் தமிழில் நிறைய படங்களில் முதலீடு செய்வது. FY 2012-ல் 77  படங்களையும் FY 2013ன் முதல் பாதியில் 42 படங்களையும் வெளியிட்டது.
 
2) சில படங்களில்  Endemol, ஷில்பா ஷெட்டியின் நிறுவனம் போன்றவையோடு Co-Production முறையில் முதலீடு செய்கிறது. மற்ற படங்களை தயாரிப்பின் ஆரம்ப நிலையிலேயே நல்ல விலைக்கு வாங்கி விடுகிறது.
 
3) 35-40% வரையிலான முதலீட்டை படத்தின் வெளிநாட்டு உரிமைகளை தனது தாய் நிறுவனத்துக்கு விற்பதன் மூலம் திரும்ப பெறுகிறது. Satellite TV, பாடல் உரிமைகள் மூலம் இன்னொறு 35-40%. ஆகா கிட்டத்தட்ட 80% முதலீட்டை பாக்ஸ் ஆபீஸ் ரிலீஸ்-க்கு முன்னதாகவே திரும்பப்பெற்று விடுகிறது 
 
4) 2000 படங்களைக்கொண்ட சினிமா லைப்ரரி Eros கைவசம் உள்ளது. அதிலிருந்து  டிவி உரிமைகள், DVD  CD ரிலீஸ் மூலமும் லாபம் ஈட்டுகிறது.
 
ஹிந்தி மற்றுமன்றி மற்ற மொழிகளிலும் காலூன்றியிருப்பது, சிறப்பான படங்களைக்கொண்ட லைப்ரரி, சினிமா தியேட்டர்களோடு இருக்கக்கூடிய உறவு, மற்றவர்களோடு சேர்ந்து தயாரிக்க ஒப்பந்தமிடும் தன்மை இவை Eros-ன் பலங்கள்.
 
RISKS
 
சினிமா தொழில் கொஞ்சம் lumpy என்று சொல்வார்கள். பெரிய நடிகர்களின் ரிலீஸ் இருக்கும் நேரத்தில் அதிக லாபம் இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் சுணக்க நிலை காணப்படும். ( RaOne, எந்திரன் ரிலீஸ் ஆனபோது Eros results மிகச்சிறப்பாக இருந்தது ). தயாரிப்பில் ஏற்படும் தாமதம் முதலீட்டை அதிகப்படுதக்கூடிய வாய்ப்புகள் உண்டு.  சில நல்ல projects தள்ளிபோவது மட்டுமன்றி ரததாகவும் வாய்ப்புள்ளது (கௌதம் மேனன் இயக்க இருந்த யோஹன் ஒரு சிறந்த உதாரணம்.) மிக முக்கியாமாக Piracy 
 
இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தியார்களுக்கு சினிமா மீது உள்ள பற்று,Eros-ன் அனுபவம், தயாரிப்பில் இருக்கக்கூடிய படங்களின் பட்டியல் இவற்றை கருத்தில் கொண்டு ஓராண்டு கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
 
FY 2013 releases so far – Dabangg 2, Son of Sardaar, Khiladi 786, Attacks of 26/11, Ferrari Ki Sawaari, Cocktail மாற்றான் மற்றும் பல.
 
இனி எதிர்பார்க்ககூடிய படங்கள் – கோச்ச்சடையான், ராம் லீலா (சஞ்சய் லீலா பன்சாலி), Go Goa Gone, Sarkar 3, ராணா…..(ராணாவை அடுத்து   KV ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் Eros தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன )
 
Price Triggers
 
1) போன காலாண்டின் முடிவில் Rs 1.50 dividend அறிவித்தது Eros. தொடர்ந்து dividend வழங்கினால் முதலீட்டாளர்கள்   பங்கை விரும்புவார்கள். ரேரடிங் வாய்ப்பு உள்ளது 

 
 
2) HBO -ஓடு இணைந்து Defined, HITS என்கிற 2 விளம்பரம் இல்லாத pay channels , சமீபத்தில்  DTH-ல் Eros கொண்டு வந்தது. இதன் மூலம் கொஞ்சம் ஸ்திரமான வருமானம் இருக்கும்.
 
3) வரும் காலங்களில் Non-theatrical revenues அதிகமாகும் வாய்ப்பு 
 
4) கோச்ச்சடையானின் மகத்தான வெற்றி 🙂 (என்னடா இது முட்டாள் தனமாக என்று நீங்கள் நினைக்கலாம், அனால் கடந்தகாலத்தை பார்த்தீர்களானால் சிவாஜி, எந்திரன் வெளியீட்டின் போது முறையே பிரமிட் சாய்மீரா பங்குகளும் Eros பங்குகளும் நல்ல உயரத்தை தொட்டன.)
 
ஓராண்டு வரை வைத்திருக்ககூடிய முதலீட்டார்கள் Rs 160-170 range-ல் இந்த பங்கை வாங்கலாம்.

 

 

FY 2012-2013 – ஒரு பார்வை

31 மார்ச்

இந்த நிதியாண்டு நிறைவு பெறுகிற இந்த நேரத்தில் பங்கு சந்தை கடந்த சில மாதங்களில்  எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை குழப்பங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த நிதியாண்டின் துவக்கத்தில் தான் பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்காக வாங்குவதென தீர்மானித்தேன். அதன்படி சில பங்குகளை குறுகிய கால வர்த்தகத்திற்கும் சிலவற்றை நீண்ட கால அடிப்படையுளும் வாங்கினேன். இந்த ஆண்டு நான் கவனித்த சில விஷயங்கள் –

1) பங்குகளின் விலை அதிகம் இறங்கிவிட்டதென்ற ஒரே காரணத்திற்காக சில பங்குகளில் காலைவைத்தேன். இவ்வளவு கீழே இருக்கிறதே இதற்க்கு மேலுமா இறங்கும் என்ற எண்ணத்தில் CEBBCO, Suzlon,IVRCL போன்ற பங்குகளை வாங்கினேன். சந்தை என்னுடைய தவறை பட்டவர்த்தனமாக வெளியே கொண்டுவந்து விட்டது. இப்படிப்பட்ட பங்குகளில் ஏன் பணத்தை போடுகிறோம் என்று யோசித்து பார்த்தேன் – மனிதர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் பேராசை தான் காரணம். பங்கு சந்தையில் கொஞ்ச ஆண்டுகளாவது அனுபவம் உள்ள எல்லோரும் Rs 5-6 சத்யம் வாங்கினேன், 50 ரூபாய்க்கு விற்றேன் என்று கதை சொல்கிற நண்பர்களை பார்த்திருப்போம். எல்லோருக்குமே நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வராத என்ற ஏக்கம் இருக்குமென நினைக்கிறேன். சீட்டு கம்பெனிகளில் பணம் போட்டு ஏமருவதர்க்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

 

2) வாங்கிய பங்கை நஷ்டத்தில் விற்பதென்பது மிக கசப்பான விஷயம். குறிகிய கால நோக்கத்தோடு நல்ல லாபம் கிடைக்குமென கருதி Tata Power, Hindalco போன்ற பங்குகளை வாங்கினேன். நாம் ஒன்று நினைக்க சந்தை வேறொரு முடிவை எடுத்து இருந்தது. ஏறும் என்று நினைத்து வாங்கிய பங்குகளில் இறங்குமுகம் தான். நஷ்டத்தில் விற்க மனம் இல்லாததால் இவை இன்று நீண்ட கால முதலீடுகளாக மாற்ற வேண்டிய கட்டாயச்சூழல்.
 பெரும்பாலும் Small, Mid-cap பங்குகளில் முதலீடு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். எப்போது வாங்குவது, எந்த விலையில் விற்பது என்ற தெளிவு/முதிர்ச்சி இன்னமும் வரவில்லை. இதற்க்கு நான் கொடுத்திருக்கும் விலை சற்றே அதிகம். Aurobindo Pharma, Atul Auto போன்ற பங்குகள் நல்ல லாபத்தில் இருந்தபோது இன்னும் நல்ல வளர்ச்சி காணும் வைப்பு உள்ளது என்று கணக்கிட்டு முழு holding-ஐயும் அப்படியே வைத்திருந்தேன். விளைவு என்னுடைய paper profits காலியாகி முதலுக்கே மோசம் என்ற நிலை இன்று. ஆனாலும் நல்ல பங்குகள், 1-2 ஆண்டுகளில் நிலைமை சீராகும் என்று நினைக்கிறேன். இனிமேல் சில மாதங்களுக்கு  ஒரு முறை கொஞ்சம் profit booking  செய்ய வேண்டும்.
 இந்த ஆண்டில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்
-அதிக கடன் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு கூடாது
– முதலாளிகளின் பங்குகள் pledge செய்யப்பட்டிருந்தால், தவிர்த்து விட வேண்டும் (CEBBCO, டிஷ்மன் Pharma போன்றவை)
 
 அண்மையில் ‘Reminiscences of a stock operator’ என்ற புத்தகத்தை படித்தேன். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிற அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய எண்ணற்ற தொழில் ரகசியங்களைக்கொண்ட ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம். ஒரு வரியை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்
“If a man didn’t make mistakes he’d own the world in a month. But if he didn’t profit by his mistakes he wouldn’t own a blessed thing.”

  
இனிவரும் காலங்கள் பங்கு முதலீட்டார்கள் அனைவருக்கும் வசந்த காலமாக இருக்குமென்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

  Wishing a great FY-14 and beyond.

அறிமுகம்

30 மார்ச்

பங்குவணிகம் குறித்த எனது புரிதல்களை, எண்ணங்களை பதிவு செய்யவே இந்த முயற்சி. ஆங்கிலத்தில் பங்குவணிகத்தில் ஈடுபடுகிற நண்பர்களுக்கென்று நிறைய நல்ல இணைய தளங்கள் உள்ளன. தமிழிலும் ஒரு நல்ல forum வேண்டும் எனக்கருதியே இந்த முயற்சியில் ஈடுபடுகிறேன்.

 
நான் ஒரு முழுநேர நிதி/முதலீட்டு ஆலோசகன் அல்ல. நானும் பலரையும் போல சந்தையின் மாணவனே. அந்த வகையில் நான் படிக்கிற நல்ல விஷயங்களை, அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளும் பாடங்களையும் சக முதலீட்டாலர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த தளம். நான் முதலீடு செய்துள்ள அல்லது செய்ய நினைக்கிற பங்குகளை பற்றிய குறிப்புகளை சில சமயங்களில் இங்கே பதிவு செய்வேன். இங்கே உள்ள பதிவுகளை நன்கு ஆராய்ச்சி செய்து உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பட்சத்தில் உங்கள் நிதி ஆலோசகரின் உதவியோடு சுய நம்பிக்கையோடு எடுங்கள்.
 
இந்த தளத்தில் என்ன இருக்கும் 
1) என்னுடைய முதலீடுகள், அவற்றை பற்றிய குறிப்புகள் மற்றும்  அலசல்கள்  
2) நான் முதலீடு செய்ய வேண்டி கவனிக்கிற சில பங்குகள் பற்றிய குறிப்புகள் 
3) முதலீடு சம்பந்தமாய் நான் படிக்கிற நல்ல விஷயங்கள், துணுக்குகள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் 
4) சந்தையின் போக்கு பற்றிய எனது எண்ணங்கள் 
 
நான் ஒரு Technical Analyst கிடையாது. ஆகையினால் தினம் சந்தையின் முக்கியமான levels பற்றிய எண்ணங்கள்    எதுவும் இருக்காது.
 
நல்ல திட்டமிடலோடு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு  இந்த பயணத்தை தொடங்குகிறேன். 
 
தொடர்ந்து பேசுவோம்….
 
வாழ்த்துக்களுடன் 
-ராம்